நளினி வீட்டு முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய பொதுமக்கள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்து உத்தரவிட்டதையடுத்து காட்பாடி பிரம்மபுரத்தில் நளினி தங்கி உள்ள வீட்டின் முன்பு பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Update: 2022-11-11 17:55 GMT


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்து உத்தரவிட்டதையடுத்து காட்பாடி பிரம்மபுரத்தில் நளினி தங்கி உள்ள வீட்டின் முன்பு பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

6 பேர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனின் மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் கடந்த 10 மாதமாக பரோலில் வீட்டில் உள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் உள்ளிட்ட 7 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இதையடுத்து இந்த வழக்கில் பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு மற்ற 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

பட்டாசு வெடித்து

இதையடுத்து காட்பாடி பிரம்மபுரத்தில் நளினி தங்கி உள்ள வீட்டின் அருகே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பரோலில் தங்கி உள்ள நளினிக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது விடுதலை செய்யப்பட்டதால் அவரை சந்திக்க பல்வேறு தரப்பினர் வருகை தர வாய்ப்பு உள்ளதாக காவல்துறை கருதியது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நளினி மற்றும் அவரது தாயார் பத்மா ஆகியோர் வீட்டில் உள்ளனர்.

இவர்களிடம் பேட்டி எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள், புகைப்படக்காரர்கள் பலர் அவரது வீட்டின் அருகே திரண்டனர். இதனால் அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்