தகரசெட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது
சிவகாசியில் தகரசெட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வெள்ளையாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கிழக்கு தெருவை சேர்ந்த வெள்ளைமுத்து (வயது 32) என்பவர் தகரசெட்டில் பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீசார் ரூ.5,500 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து வெள்ளை முத்துவை கைது செய்தனர்.