சிவகாசி
சிவகாசி கிழக்கு போலீசார், பி.கே.என். ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஆட்கள் நடமாட்டம் இருந்தது. இதைதொடர்ந்து போலீசார் அங்கு திடீர் ஆய்வு செய்த போது உரிய அனுமதியின்றி கட்டிடத்தில் பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு இருந்த சோலை காலனியை சேர்ந்த பாலமுருகன் (வயது 55) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.