தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
சிவகிரியில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
சிவகிரி:
சிவகிரி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செல்வக்குமார் தலைமையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தென்மேற்கு பருவமழையையொட்டி முன் எச்சரிக்கை பாதுகாப்புக்காக வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் முன்பு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் பரமசிவன் மற்றும் அதிகாரிகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.