விளாத்திகுளம் வேளாண்மை அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
விளாத்திகுளம் வேளாண்மை அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
எட்டயபுரம்:
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், அந்த அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சியை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.