தீத்தடுப்பு செயல்விளக்கம்
ஜோலார்பேட்டை அருகே தீத்தடுப்பு செயல்விளக்கம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சி மாவட்ட ஆயுதப்படை மைதானம் அருகே திருப்பத்தூர் இருசக்கர வாகன நல சங்க கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பு, இணை செயலாளர்கள் சி.சங்கர், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருப்பத்தூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு தீத்தடுப்பு செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது ஆரம்ப நிலையில் உள்ள தீயை அணைப்பது குறித்தும், தீ விபத்தில் ஏற்பட்டவர்களை முதலுதவி செய்து காப்பாற்றுதல் மற்றும் மாடியில் தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது குறித்தும் தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.
இதில் திருப்பத்தூர் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து இரு சக்கர வாகன மெக்கானிக்குகள் கலந்து கொண்டனர்.