தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போடியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-07-11 18:45 GMT

தீயணைப்பு துறை சார்பில், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு போடி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீத்தடுப்பு, பேரிடர் மீட்பு குறித்து ஒத்திகை நடத்தி காண்பித்தனர். இதில் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்