பெண்ணாடம், இருளக்குறிச்சிஅரசு பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு
பெண்ணாடம், இருளக்குறிச்சியில் உள்ள அரசுபள்ளிகளில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்ணாடம்,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகம், வணிகவளாகம், பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீயணைப்பு துறையினர், தீ தடுப்பு ஒத்திகை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். இதில் ஆசிரியர்கள் பொன்னிவளவன், கந்தவேல், காளிதாசன், கமலநாதன், பூங்கொடி, சுகந்தி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்
இதேபோல் மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையம் சார்பில், இருளக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்து ஒத்திகை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.