விருத்தகிரீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு
விருத்தகிரீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நடந்தது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஊழியர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணி தலைமை தாங்கினார். அறநிலையத்துறை செயல் அலுவலர் மாலா முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார், போக்குவரத்து நிலைய அலுவலர் மணிவேல் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்பது, கியாஸ் கசிவின் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், மின் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது, பேரிடர் மீட்பு குறித்து கோவில் ஊழியர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.