கோவில் பணியாளர்களுக்கு தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு
கோவில் பணியாளர்களுக்கு தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமை தாங்கினார்.
இதில் தீயணைப்பு வீரர்கள், கோவில் பணியாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்காத்துக்கொள்வது எப்படி, விபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கமாக பயிற்சி அளித்தனர். தீ விபத்தை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கோவில் செயல் அலுவலர் பரந்தாமகண்ணன் மற்றும் கோவில்களில் பணியாற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.