வால்பாறையில் கல்லூரி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு
வால்பாறையில் கல்லூரி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு ஒத்திைக நடந்தது.
வால்பாறை
வால்பாறையில் கல்லூரி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு ஒத்திைக நடந்தது.
விழிப்புணர்வு
வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீயணைப்பு பணியின் போது இறந்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை தீத் தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி பிரகாஷ்குமார் தலைமையில் தீவிபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது மக்கள் பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.
வால்பாறை பகுதியை பொறுத்தவரை அதிகமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் தீவிபத்து ஏற்படுவது வழக்கம். இதனால் சந்தை நாளான நேற்று வால்பாறை நகர் பகுதிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வந்திருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஒத்திகை
ஒலி பெருக்கி மூலம் குடியிருப்புகளில் மின்சார ஒயர்கள் பழுதடைந்திருந்தால் அது குறித்து எஸ்டேட் நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். எஸ்டேட் பகுதி தொழிலாளர்கள் வீடுகளின் மேற்கூரைகள் மீது வெயில் காலத்தில் ஓடுகள், தகர கூரைகள் நனையும் படி தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியிலும் 2 தீயணைப்பு கருவிகள் வைக்க வேண்டும். தேயிலை தொழிற்சாலைகளில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் தொழிற்சாலையில் உள்ள அவசரகால வழிகள் உள்ள இடங்களை நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு எஸ்டேட் நிர்வாகமும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் மூலம் தீதடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும். தீயணைப்பு கருவிகள் நன்றாக செயல்படுகிறதா என்பதை எஸ்டேட் நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும். தீவிபத்து இல்லாத வால்பாறையை உருவாக்க தீத் தொண்டு வாரத்தில் உறுதி ஏற்க வேண்டும் என்று தீயணைப்பு வீரர்கள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கான தீத்தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.