தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
குடவாசல் அருகே மூலங்குடியில் உள்ள தொடக்கப்பள்ளியில் குடவாசல் தீயணைப்பு நிலையம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் குடவாசல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதிபாசு மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு திடீரென தீ விபத்து ஏற்படும்போது தீயை எப்படி அணைப்பது? மழை, வெள்ள காலங்களில் தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். செயல் விளக்க நிகழ்ச்சியை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.