தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மேல்நகர் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-10-22 18:45 GMT

கண்ணமங்கலம்

மேல்நகர் பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கண்ணமங்கலமத்தை அடுத்த மேல்நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாடுவது, தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் அருணகிரி, ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா அன்பழகன், துணை தலைவர் பிச்சாண்டி, தலைமை ஆசிரியர் அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆரணி தீயணைப்பு அலுவலர் கோபால கிருஷ்ணன், சரவணன் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது, நீர் நிலைகளில் மூழ்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை சமுதாய வளர்ச்சி அலுவலர் கார்த்திக்வாசகன், தன்னார்வலர் ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்