சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே தீ விபத்து
சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி,
சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இதன் பின்புறம் உள்ள காலி இடத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் அங்கு இருந்த புற்களில் திடீர் தீ பரவியது. இதில் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வராமல் இருந்திருந்தால் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்குகளில் தொடர்புடைய 500 வாகனங்களும் எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். எனவே அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டிய நடவடிக்கையை மாவட்ட போலீஸ் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.