ஊத்துக்குளி அருகே பழைய டயர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து நாசமாகின.

ஊத்துக்குளி அருகே பழைய டயர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து நாசமாகின.

Update: 2023-06-22 13:48 GMT

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே பழைய டயர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பழைய டயர்கள் எரிந்து நாசமாகின.

பழைய டயர் கடை

திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் பழைய டயர் கடைகள் உள்ளன. இங்கு கனரக வாகனங்களில் இருந்து கழற்றப்படும் டயர்களை விலைக்கு வாங்கி அதனை அறுத்து கால்நடைகளுக்கு தீவனங்கள் வைப்பதற்கான டயர் கூடைகளாக தயாரிக்கின்றனர். இந்த டயர் கூடைகள் அதிக அளவில் கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இங்கு சுப்பிரமணி என்பவர் பழைய டயரில் இருந்து கூடையாக தயாரிக்கும் கடை வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணிகளை முடித்துவிட்டு பணியாளர்களுடன் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நள்ளிரவு நேரம் அவருடைய கடை திடீரென்று தீப்பிடித்து எரிய ெதாடங்கியது. பின்னர் இந்த தீ மளமள வென கடையில் இருந்த அனைத்து டயர்களின் மீதும் பரவியது. இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ரூ.15 லட்சம் டயர்கள் எரிந்து நாசம்

ஆனாலும் தீ அருகில் உள்ள மணி என்பவருக்கு சொந்தமான கடைக்கும்பரவியது. இதனால் 3 கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டிருந்த அனைத்து டயர்களும் எரிந்து நாசமானது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான டயர்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்