மருத்துவ கிட்டங்கியில் தீ விபத்து

மருத்துவ கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-04-19 19:27 GMT


விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு மருத்துவக் கிட்டங்கி உள்ளது. இந்த மருத்துவ கிட்டங்கிக்கு பின்புறம் குப்பைகள் மற்றும் கழிவு அட்டைகள் கொட்டி கிடந்தன. இதில் திடீரென தீப்பிடித்தது. இதனால் மருத்துவக் கிட்டங்கி அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பல லட்சம் மதிப்புள்ள மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தப்பின.

Tags:    

மேலும் செய்திகள்