வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை தோட்டக்குறிச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்த ஒத்திகையில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பித்து கொள்வது, தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், மழை, வெள்ளம், புயல் போன்ற சமயங்களில் எப்படி தற்காத்து கொள்வது என்பன போன்ற பல்வேறு தீத்தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் பேரூராட்சி தலைவர் ரூபா, பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி, பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.