குளக்கரையில் தீவிபத்து
சாத்தான்குளம் அருகே குளக்கரையில் தீவிபத்து ஏற்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியில் இருந்து நெடுங்குளம் செல்லும் குளக்கரையில் காய்ந்த புல் வெளிகள், சறுகுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றில் தோட்டத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனையடுத்து தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.