சேலம் அரசு மருத்துவமனையில் மின் கம்பி அறுந்து விழுந்து தீ விபத்து

சேலம் அரசு மருத்துவமனையில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-12-12 08:10 GMT

சேலம்,

சேலம் அரசு மருத்துவமனையில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இங்கு பழைய குழந்தைகள் வார்டு பகுதியின் முன்புறமுள்ள மின் கம்பி அறுந்து விழுந்து தீப்பற்றியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டதன் பேரில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்