தீ விபத்து குறித்த விழிப்புணர்வு முகாம்
அக்ராகரம் அரசு பாலிடெக்னிக்கில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராகரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறை சார்பில் தீவிபத்து குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் தலைமை தாங்கினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அரசு கல்லூரி முதல்வர் பூங்கோதை மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது பருவ மழை முன்னிட்டு முன் எச்சரிக்கை குறித்தும் மற்றும் தீவிபத்து தடுப்பதும் ஒத்திகை மூலம் செயல்விளக்கம் நடத்தினர்.
இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.