துணை மின்நிலையத்தில் தீ விபத்து
துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டை கிராமத்தில் வெள்ளாள விடுதியில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பவர் பிளாண்ட் 440 கே.பி. சேமிப்பு பேட்டரி குடோன் அறையில் 220 பேட்டரிகளில் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மணல் மற்றும் தீயணைப்பான் கருவி ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.