அருமனை அருகே தனியார் ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து ; 4 டன் ரப்பர் சீட் எரிந்து நாசம்

அருமனை அருகே தனியார் ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 4 டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து நாசமானது.

Update: 2022-08-24 18:17 GMT

அருமனை, 

அருமனை அருகே தனியார் ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 4 டன் ரப்பர் சீட்டுகள் எரிந்து நாசமானது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

தீ விபத்து

அருமனை அருகே ஆலஞ்சோலை என்ற இடத்தில் தனியார் ரப்பர் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் ரப்பர் மரங்களை தனிஸ்லாஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பரமரித்து வருகிறார். அந்த ரப்பர் மரங்களில் இருந்து வடிக்கப்படும் பாலை ரப்பர் சீட் ஆக மாற்றி ரப்பர் உலர் கூடத்தில் காய போடுவது வழக்கம்.

அதே போல் ரப்பர் உலர் கூடத்தில் ரப்பர் சீட் காய போடப்பட்டுள்ளது. உலர் கூடத்தில் பாதுகாப்பான முறையில் தீ போடுவது வழக்கம். ஆனால் எதிர்பாராத விதமாக ரப்பர் சீட்டில் தீ பற்றி கொண்டது.

4 டன் ரப்பர் சீட் நாசம்

உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் குலசேகரம் மற்றும் குழித்துறை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 4 டன் எடையுள்ள 5 ஆயிரத்து 500 ரப்பர் சீட்டுகள் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சத்துக்கு மேல் இருக்கும்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், கடையால் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்