பெருந்துறை அருகே பிஸ்கட் கம்பெனியில் தீ விபத்து

பெருந்துறை அருகே பிஸ்கட் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-06-25 22:08 GMT

பெருந்துறை

பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் துடுப்பதி பிரிவு அருகே பிஸ்கட் தயாரிக்கும் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. ரவீஸ்குமார் (வயது 33) என்பவர் அதை நடத்தி வருகிறார். பிஸ்கட்டுகளை அடைக்கும் பிளாஸ்டிக் கவர்கள் அடங்கிய பண்டல்கள், கம்பெனியின் முன்புறம் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர் பண்டல்களில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் உடனே பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தார்கள். இந்த விபத்தில் தீயில் கருகி நாசமடைந்த பொருட்களின் மதிப்பு குறித்து உடனடியாக தெரியவில்லை. எப்படி தீப்பிடித்தது? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்