குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து - பொருட்கள் ஏரிந்து நாசம்

குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்றபட்ட தீ விபத்தால் பல பொருட்கள் ஏரிந்து நாசம் அடைந்தது.

Update: 2022-08-26 04:46 GMT

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியில் தனியார் தீப்பட்டி தொழிற்சாலை உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இன்று இன்று காலையில் 9 மணி அளவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் மருந்து தோய்ந்த தீக்குச்சி மூட்டைகளை கையாண்ட போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றியது. அப்போது ஒரு சிலரே பணியில் இருந்தனர். பணியில் இருந்த சூப்பர்வைசர் ரவி என்பவர் (வயது40), மூட்டைகளை அப்புறப்படுத்த முயன்ற போது சிறு காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பாய்ச்சி தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது அதிக அளவு தொழிலாளர்கள் பணி செய்யும்போது தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக ஓரிரு தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருந்ததால் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு பூபதிராஜா,டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளான பொருட்கள் ஏரிந்து நாசமாயின

Tags:    

மேலும் செய்திகள்