நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வீரணம் பாளையத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 37). இவர் கரூர் பைபாஸ் சாலையில் டிராக்டர் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்து வரும் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ராஜி நிறுவனத்தை அடைத்து விட்டு வெளியூர் சென்று விட்டார். இந்தநிலையில் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு தேவையான உதிரிபாகங்கள், கணினி, கண்காணிப்பு கேமராக்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ராஜி கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிந்து, தீ விபத்து எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகிறார்.