அரூர்:
அரூர் அடுத்த தீர்த்தமலை அருகே உள்ள குரும்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். கூலித்தொழிலாளி. நேற்று மாலை இவருடைய குடிசை வீடு தீப்பிடித்து எரிவதாக அரூர் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீ மேலும் பரவாமல் அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் பீரோவில் இருந்த ஆதார் கார்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய சான்றிதழ்கள், ரூ.30 ஆயிரம், 1 பவுன் நகை மற்றும் தட்டுமுட்டு சாமான்கள் எரிந்து சேதம் அடைந்தன. மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து தீர்த்தமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.