திண்டிவனம்,
திண்டிவனம் ரொட்டிக்கார வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 80). இவருடைய மகன் கவுதமன் (47). இவர் நேரு வீதியில் முட்டை மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டுக்குள் இருந்து புகை வந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டுகுள் இருந்த ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். மின்கசிவின் காரணமாக தீ விபத்து நேர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டிவனம் போாலீசார் விசாரித்து வருகின்றனர்.