தீ விபத்து

நெல்லையில் கூட்டுறவு சங்கத்தில் தீ விபத்து

Update: 2022-08-29 20:46 GMT

நெல்லை வண்ணார்பேட்டையில் அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்படை வீரர்கள், நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்