தலமலை அருகே மின் கம்பி உரசியதில் வனப்பகுதியில் தீ விபத்து
தலமலை அருகே மின் கம்பி உரசியதில் வனப்பகுதியில் தீ விபத்து
தாளவாடி
தாளவாடியில் இருந்து தலமலை வரை உள்ள மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் செல்கிறது. இந்த நிலையில் முதியனூர் வனப்பகுதியில் நேற்று காற்று வீசி உள்ளது. இதனால் சாலையோரம் சென்ற மின் கம்பியானது உரசி தீப்பொறி ஏற்பட்டு உள்ளது. இந்த தீப்பொறி சாலையோரத்தில் காய்ந்து கிடந்த செடிகள் மீது விழுந்தது. இதில் செடிகள் மற்றும் கொடிகள் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மின்சார வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.