பெட்ரோல் பங்க் அருகே ஓடும் கார் தீப்பிடித்தது- பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

பெட்ரோல் பங்க் அருகே ஓடும் கார் தீப்பிடித்தது- பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

Update: 2023-02-07 21:22 GMT

fireசேலம் திருச்சி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள் (வயது 40). இவர் அந்தியூர் அருகே உள்ள காட்டூரில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு காரில் வந்தார். பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் காரில் சேலம் புறப்பட்டார். பருவாச்சி அருகே சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே காரை அவர் ரோட்டு ஓரமாக நிறுத்தினார். சில நொடிகளில் காரின் ரேடியேட்டர் பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இந்த சம்பவம் நடந்த இடத்தின் அருகே ஒரு பெட்ரோல் பங்க் இருந்தது. உடனே இளையபெருமாள் அங்கு ஓடிச்சென்று நடந்ததை கூறினார். இதையடுத்து பெட்ரோல் பங்க் பணியாளர்கள் தாங்கள் வைத்திருந்த தீயணைப்பான் கருவியை கொண்டு சென்று காரில் எரிந்த தீயை அணைத்தார்கள். மேலும் இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெட்ரோல் பங்க் அருகே காரில் பிடித்த தீயை உடனே அணைத்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்