தேன்கனிக்கோட்டை அருகே அடுப்பை பற்ற வைத்தபோது தீயில் கருகிய தம்பதி-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Update: 2022-11-01 18:45 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே மேலூர் கிராமத்தில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் தாமோதரன் (வயது 36), இவருடைய மனைவி வினோதினி (30) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அங்குள்ள வீட்டில் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் வினோதினி சமையல் செய்ய மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென அவரது சேலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு தாமோதரன் ஓடி வந்தார். அவர் வினோதினி மீது பற்றிய தீயை அணைக்க முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்