விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு...!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-17 11:46 GMT

நெல்லை,

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். இவர் விசாரணைக்கு வரும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த புகாரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதத்தால் கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்தரவதை செய்தால் குற்றங்களுக்காக பல்வீர் சிங் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த் அவிவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களின் காவலர்கள் கூண்டோடு இடமாற்றப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்