பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-06-23 18:49 GMT

புகழூர் நகராட்சிக்குட்பட்ட பிரியாணி, டிபன், பழம், பலகாரம், பேக்கரிகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் நகராட்சி துப்புரவு அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு கடைகளில் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்