அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு அபராதம்
அதிக பாரம் ஏற்றி வந்த 4 லாரிகளுக்கு அபராதம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் கற்கள் உள்ளிட்டவை லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து கிணத்துக்கடவு பகுதியில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் உத்தரவின்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுல் கிருஷ்ணன், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஆகியோர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை ஆய்வு செய்தபோது 4 லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 லாரிகளுக்கு ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.