தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த ஓட்டலுக்கு அபராதம்

நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த ஓட்டலுக்கு அபராதம்

Update: 2023-02-02 20:25 GMT

நாகர்கோவில், 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என நாகர்கோவில் மாநகர சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையில் அதிகாரிகள் நேற்று பார்வதிபுரம், செட்டிகுளம், பீச்ரோடு ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அப்போது பார்வதிபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு செய்தபோது, அங்கு 50 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்