நடப்பு காலாண்டுக்கான சாலை வரியைவாகன உரிமையாளர்கள் அபராதமின்றி நாளைக்குள் செலுத்தலாம்வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்
தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நடப்பு காலாண்டில் 30.6.2023-க்கு சாலை வரி செலுத்தாத சரக்கு வாகனங்கள் மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்களுக்கு அபராதம் இன்றி வரி செலுத்த நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாளாகும். எனவே அனைத்து வாகன உரிமையாளர்களும் அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரியினை ஆன்லைன் மூலம் அபராதமின்றி செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் சாலை வரி செலுத்தாத வாகனங்கள் பொது சாலையில் இயக்கப்பட்டால் அவை சிறை பிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் 2023- 2024- ம் நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்களான கார், ஜே.சி.பி. கிரேன், டிராக்டர், கம்பரசர் மற்றும் ரிக் ஆகிய வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பசுமை வரியை செலுத்தாமல் பொது சாலையில் இயக்குவது தெரிய வருகிறது. இந்த நிதியாண்டிற்கான போக்குவரத்து அல்லாத வாகனங்கள் சாலை வரி செலுத்தாமல் பொது சாலையில் இயக்கப்பட்டால் அந்த வாகனங்களை சிறை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாலை வரியை https://parivahan.gov.in என்ற இணையதள முகவரியில் செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.