புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேருக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் வைத்திருந்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் கோவிந்தன் தலைமையில், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரையூர் பகுதியில் உள்ள 2 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். அப்போது பெட்டி கடைக்காரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இதேபோல் டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்காரர் ஒருவருக்கு புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.