நெருப்பூர் வனப்பகுதியில்மானை வேட்டையாடிய 5 பேருக்கு அபராதம்

நெருப்பூர் வனப்பகுதியில் மானை வேட்டையாடிய 5 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

Update: 2023-10-05 19:30 GMT

பென்னாகரம்:

நெருப்பூர் வனப்பகுதியில் மானை வேட்டையாடிய 5 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

ரோந்து பணி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெருப்பூர் பதனவாடி காப்புக்காடு பகுதிகளில் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர்கள் சக்திவேல், முனுசாமி மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 5 பேர் புள்ளிமானை வேட்டையாடி எடுத்து சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொங்கரப்பட்டியை சேர்ந்த மாயக்கண்ணன் (வயது 21), கோட்டையூர் மாதேஷ் (40), கணேசன் (45), காவேரி (47), சோமு (20) ஆகியோர் என்பதும், இவர்கள் வனப்பகுதியில் மானை வேட்டையாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

அபராதம்

மேலும் வன விலங்கை வேட்டையாடியதற்காக மாயக்கண்ணன், மாதேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரமும், மற்ற 3 பேருக்கும் தலாரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இவர்கள் 5 பேரிடமிருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் பென்னாகரம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்