போலீசார் வாகன சோதனை:மதுபோதையில் வாகனம் ஓட்டிய 50 பேருக்கு அபராதம்
மதுபோதையில் வாகனம் ஓட்டிய 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது தர்மபுரி, பாலக்கோடு, அரூர், பென்னாகரம், உட்கோட்ட பகுதிகளில் மது போதையில் வாகனத்தை ஓட்டி வந்த 50 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர்.