பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அடுத்த வெப்படை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரி சிங்காரவேலர் தலைமையில் அதிகாரிகள் நேற்று வெப்படை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள 3 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு கடையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதற்காக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.