நிதி நிறுவன உரிமையாளர் கைது

கோவையில் பெண்ணிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-10 16:59 GMT


கோவையில் பெண்ணிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அதிக வட்டி

கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி வினுதா (வயது 41). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டதால் ராமநாதபுரம் பார்க் டவுனை சேர்ந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் பழனியப்பனிடம் (52) கடன் வாங்கினார். இதன்படி தனக்காகவும், தனக்கு தெரிந்தவர்களுக்காவும் 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு அவரை பல்வேறு கட்டங்களாக ரூ.36 லட்சத்து 60 ஆயிரம் கடனாக வாங்கியதாக தெரிகிறது.

இதற்காக வினுதா தனது கணவர் கையெழுத்திட்ட காசோலைகள் மற்றும் சில ஆவணங்களை பழனியப்பனிடம் வழங்கியுள்ளார். இதுவரை வினுதா பெற்ற கடனுக்காக ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் வட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நான் கொடுத்த காசோலைகள், ஆவணங்களை பழனியப்பனிடம் திருப்பி கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் ஆவணங்களை திருப்பி கொடுக்காமல் அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

நிதி நிறுவன உரிமையாளர் கைது

இதுகுறித்து வினுதா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், ராமநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் பழனியப்பன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து 766 காசோலைகள், 163 முத்திரைதாள்கள், நோட்டுகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் அவர் அதிக வட்டி கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து பழனியப்பனை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்