தொழிலாளிக்கு நிதி உதவி; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
விளாத்திகுளம் அருகே மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தொழிலாளிக்கு நிதி உதவி வழங்கினார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள மல்லேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவர் தினமும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். மேலும் அவருக்கு தெரிந்த தொழில் செய்து தனது பேரன், பேத்தியை வளர்ப்பதற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதனை ஏற்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு சென்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கூலித்தொழிலாளி ஆன முருகனின் பேரன், பேத்திகளுக்கு 10000 ரூபாய் நிதி உதவி வழங்கினார். விளாத்திகுளம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், முன்னாள் வார்டு உறுப்பினர் ராமமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.