சத்துணவு அமைப்பாளர் குடும்பத்துக்கு நிதி உதவி
சீர்காழியில் சத்துணவு அமைப்பாளர் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் சந்திரகுமாரி (வயது 49) என்பவர் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய குழு தலைவர் கமல் ஜோதி தேவேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன், ஊராட்சி ஒன்றிய சத்துணவு துறை மேலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரத்தை வழங்கினர். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.