காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நிதியுதவி

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நிதியுதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.

Update: 2023-06-13 08:21 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 282 மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரியும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் சிறந்த விற்பனையாளருக்கான முதல் பரிசு ரூ.4,000-க்கான பரிசுத் தொகையும், சான்றிதழ் மற்றும் 2-ம் பரிசாக ரூ.3,000-க்கான பரிசுத் தொகையும், சான்றிதழும், சிறந்த எடையாளருக்கான முதல் பரிசு ரூ.3,000-க்கான பரிசுத் தொகையும், சான்றிதழ் மற்றும் 2-வது பரிசாக ரூ.2,000-க்கான பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நிதியுதவிகள்

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், இயற்கை மரணம் அடைந்த 4 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ஈமச்சடங்கிற்கான ரூ.68,000 நிதியுதவியினையும், விபத்தில் கூடுதல் ஊனம் அடைந்த 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.50,000 நிதியுதவியும், 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.6,840 மதிப்பிலான தையல் எந்திரமும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சீபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்