ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நிதி உதவி

மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

Update: 2023-02-13 21:16 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இருக்கைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்க லெமுரியா அறக்கட்டளை தலைவர் சு.குமணராசன், நங்கைராசன் ஆகியோர் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்கள்.

தலைமை ஆசிரியை கதீஜா மெகர்பானு, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் மரியதாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்