தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை
தென்காசி பஜாரில் தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை களை கட்டியது
தென்காசி பஜாரில் தீபாவளி பொருட்கள் இறுதிக்கட்ட விற்பனை களை கட்டியது.
தீபாவளி விற்பனை
இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஜவுளி, பட்டாசு, பலகாரம், மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க தென்காசி பஜாரில் நேற்று ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
கீழரத வீதி, மேல ஆவணி மூல வீதி, மெயின் பஜார் ஆகிய அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் கூட்டம் காலை 11 மணி முதல் அலை மோதியது.
போக்குவரத்து நெருக்கடி
ஜவுளி கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை குடும்பத்துடன் வந்து வாங்கி சென்றனர்.
பொதுமக்கள் திரண்டு வந்ததால் அடிக்கடி நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தென்காசி நகர போலீசார் பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்து நெரிசலையும் சீர் செய்தனர்.