இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை 6, 7-ந் தேதிகளில் நடக்கிறது
விழுப்புரம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2022- 23-ம் கல்வியாண்டிற்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வருகிற 6, 7-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அவர்கள் மட்டும் குறிப்பிட்ட தேதியில் காலை 10 மணிக்கு கல்லூரிக்கு நேரில் வந்து ஒதுக்கப்பட்ட பாடப்பிரிவில் சேர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த தகவலை கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.