கரும்பு சாகுபடி தொழில்நுட்ப களப்பயிற்சி
கம்மாபுரம் அருகே கரும்பு சாகுபடி தொழில்நுட்ப களப்பயிற்சி
கம்மாபுரம்
விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நீர்வள, நில வள திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் பற்றிய களப்பயிற்சி கம்மாபுரம் அருகே கோ.மாவிடந்தல் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வேளாண் விஞ்ஞானிகள் காயத்ரி, பாரதிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோடை உழவின் நன்மைகள், கரணை நேர்த்தி செய்யும் முறை, சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை, ஒருங்கிணைந்த உரம், களை நிர்வாகம், மண், நீர் பரிசோதனை, வளர்ச்சி ஊக்கியான கரும்பு பூஸ்டரின் முக்கியத்துவம், கரும்பு பயிரில் சுக்ரோஸ் சர்க்கரை அளவை அதிகப்படுத்துவது, பருவத்திற்கு ஏற்ற ரகங்களை தேர்வு செய்வது, பூச்சி மற்றும் நோய் தாக்குதலின் அறிகுறிகள், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினர். இதில் உதவி திட்ட அலுவலர்கள் செல்வமணி, கலைச்செல்வம். மணிகண்டராஜா, மகாதேவன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.