புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா
நத்தம் அருகே ஊராளிபட்டியில் புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நத்தம் அருகே ஊராளிபட்டியில் புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் நத்தம் பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, ஆர்.சி.மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜெரால்டு ஸ்டீபன் செல்வா ஆகியோர் நவநாள் திருப்பலியை நடத்தினர். பின்னர் மின் ரதத்தில் புனித சந்தியாகப்பர் பவனி வந்தார். விழாவில் ஏரக்காபட்டி, அப்பாஸ்புரம், ஆவிச்சிபட்டி, நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.