விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா
குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
அய்யம்பேட்டை:
குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கும் விழா அய்யம்பேட்டை அருகே கணபதி அக்ரகாரம் கிராமத்தில் நடந்தது. விழாவுக்கு பாபநாசம் வேளாண்மை துணை இயக்குனர் சுஜாதா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சரவணன் வரவேற்றார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர் கலந்துகொண்டு ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா, 50 கிலோ டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாஷ் ஆகிய இடுபொருட்களை 50 விவசாயிகளுக்கு வழங்கி பேசினார். இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் கருணாகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர் கலியமூர்த்தி, வேளாண்மை அலுவலர் நடராஜன், வட்டார அட்மா திட்ட மேலாளர் சிவரஞ்சனி, வேளாண்மை துணை அலுவலர் எபினேசர், வேளாண்மை உதவி அலுவலர் குரு. சரவணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் அமலநாதன் நன்றி கூறினார்.